தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கனமழையில் எம்.எல்.ஏ.,க்களின் களப்பணி குறித்த விவாதம்

கனமழையில் எம்.எல்.ஏ.,க்களின் களப்பணி குறித்த விவாதம்

கனமழையில் எம்.எல்.ஏ.,க்களின் களப்பணி குறித்த விவாதம்


UPDATED : அக் 18, 2026 08:39 PM

ADDED : அக் 18, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 08:39 PM ADDED : அக் 18, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 16ம் தேதி இரவு திடீரென பெய்த கனமழையால் காமராஜர் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில், ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., விக்னேஷ் கண்ணன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் ஆகியோர் மழையில் நனைந்தபடியே களமிறங்கி, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினர். இவர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதற்கிடையே, காமராஜர் நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஜோஸ் சார்லஸ் மார்ட்டினிடம், மற்ற எம்.எல்.ஏ.,க்களைப் போல நீங்கள் ஏன் களத்திற்குச் செல்லவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘எம்.எல்.ஏ., மழையில் நனைவதால் மட்டும் என்ன பயன், மக்களுக்குத் தேவையானதை சரியான முறையில் செய்து கொடுப்பதே பணி என்றார்.

இதற்குப் பதிலடி தரும் விதமாக எம்.எல்.ஏ., விக்னேஷ் கண்ணன், மக்கள் அழைத்தால் நேரம் காலம் பாராமல் சென்று உதவுவதே எனது பணி. அதைத் தொடர்ந்து செய்வேன் என்றார்.

மழையில் களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பதா அல்லது பின்னணியில் நின்று உடனடித் தீர்வுகளை வழங்குவதா என்ற இந்த இருவேறு அணுகுமுறைகள் தற்போது புதுச்சேரியில் பேசுபொருளாகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us