/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடத்தில் தகராறு; இருவர் கைது
/
பொது இடத்தில் தகராறு; இருவர் கைது
ADDED : நவ 18, 2024 08:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி ; பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
வழுதாவூர் சாலை தனியார் மது கடை அருகே பொதுமக்களிடம் ஒருவர் தகராறு செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு தகராறு செய்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சண்முகாபுரத்தை சேர்ந்த கார்த்தி, 40; என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
அதே போல, சேதராப்பட்டு பொருளாதார மண்டலம் அலுவகம் அருகே, மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த, வானுாரை சேர்ந்த வினோத், 35; என்பவரை சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.