/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவருடன் தகராறு : மனைவி தற்கொலை
/
கணவருடன் தகராறு : மனைவி தற்கொலை
ADDED : மே 07, 2025 12:44 AM
புதுச்சேரி: வேலைக்கு செல்லாத கணவனிடம் கோபித்து கொண்ட, மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட்டை, குமரன் நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு; மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி கவிதா, 37; ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்தார். பாபு கடந்த ஒராண்டுகளுக்கு மேலாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று முன்தினம் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
கோபமடைந்த கவிதா, வீட்டின் அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். இதையடுத்து, பாபு அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, கவிதா துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, டாக்பர் பரிசோதித்து கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தார். பாபு புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.