தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவியுடன் தகராறு; கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு; கணவர் தற்கொலை

மனைவியுடன் தகராறு; கணவர் தற்கொலை


ADDED : பிப் 27, 2024 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்திரைப்பாளையம், இளங்கோ அடிகள் வீதியைச் சேர்ந்தவர் அய்யப்பன், 30; கோர்காடு தனியார் கம்பெனியில் சமையல் செய்யும் ஊழியர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு, 9 மற்றும் 5 வயதில் மகள், மகன் உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு எற்பட்டது. நேற்று முன்தினம் சந்தியா, தனியார் கம்பெனி வேலைக்கு செல்லும்போது, தனது குழந்தைகளை அழைத்து கொண்டு முத்திரைப்பாளையம், ஜீவா வீதியில் உள்ள தாய் வீட்டில் தங்க வைத்து விட்டு சென்றார்.

நேற்று முன்தினம் இரவு சந்தியாவின் தாய் வீட்டிற்கு வந்த அய்யப்பன், உணவு சாப்பிட்டு தன் வீட்டிற்கு வரும்படி மனைவி மற்றும் குழந்தைகளை அழைப்பு விடுத்து சென்றார்.

இரவு 10:00 மணிக்கு சந்தியா தனது குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது அய்யப்பன், மின் விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அய்யப்பனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us