UPDATED : ஜூலை 14, 2026 10:09 PM
ADDED : ஜூலை 14, 2026 08:22 PM

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் அதிகளவில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதால் தண்ணீர் செல்ல இடையூறாக உள்ளது.
கடலுார் சாலையில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு செல்கிறது. இந்த ஆற்று வழியாக மழை மற்றும் வெள்ள நீரும், மேலும் வீடுர் ஆணையில் திறக்கப்படும் உபரி நீர் இந்த ஆறு வழியாக வெளியேறுகிறது. கடல் தண்ணீர் உள் புகுகாமல் இருக்க நோணாங்குப்பம் பழைய ஆற்று பாலத்தில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆற்றில் இருந்து வந்த ஆகாயத்தாமரைகள் தடுப்பனையில் அதிகளவில் தேங்கி, படர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் செல்ல இடையூறாக ஆற்றை ஆக்கிரமித்துள்ளது. மேலும் மீன்களுக்கு சரியாக ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
