தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடற்கரை நிகழ்ச்சியில் வீசிய குப்பைகளால் அதிருப்தி

கடற்கரை நிகழ்ச்சியில் வீசிய குப்பைகளால் அதிருப்தி

கடற்கரை நிகழ்ச்சியில் வீசிய குப்பைகளால் அதிருப்தி


UPDATED : அக் 07, 2026 08:26 PM

ADDED : அக் 07, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 08:26 PM ADDED : அக் 07, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடற்கரை நிகழ்ச்சியில் பங்கேற்றோர் வீசி சென்ற குப்பைகளால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு சேவையை போற்றும் வகையில் டில்லியில், ‘விக்சித் பாரத் சங்கல்ப் மற்றும் சேவா ஜோதி யாத்திரை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அந்த நிகழ்ச்சி காணொளி வாயிலாக புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில் ஒளிபரப்பட்டது. அப்போது, சேவா ஜோதி யாத்திரை தீபத்தை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி இணைந்து ஏற்றி வைத்தனர். அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லுாரி மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், தின்பண்டங்கள் மற்றும் பிஸ்கெட்கள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் முடிவில் பல மாணவர்கள் தாங்கள் சாப்பிட்ட பிஸ்கெட் கவர், வாட்டர் பாட்டில்களை ஆங்காங்கே வீசி சென்றனர். மாணவர்களின் இச்செயல் அங்கிருந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

நகரத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய எதிர்காலச் சந்ததியினர், பொது இடத்தில் குப்பைகளைத் துாக்கி எறிந்து சென்றது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை எழுப்பியது.

இதற்கிடையே, குப்பை என மாணவர்கள் வீசிய பைக்களில் ஏராளமான பிஸ்கெட் மற்றும் குளிர்பானங்கள் இருந்தது. அதனை துாய்மை பணியாளர்கள் பிரித்து எடுத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us