/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வடிசாராய ஆலை தகராறு: இரண்டு பேருக்கு வலை
/
வடிசாராய ஆலை தகராறு: இரண்டு பேருக்கு வலை
ADDED : நவ 20, 2024 06:44 AM
புதுச்சேரி : வடிசாராய ஆலையில் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த ஆரியப்பாளையத்தில், அரசு வடிசாரய ஆலை இயங்கி வருகிறது. இங்கு, வெளி மாநிலங்களில் இருந்து சாராயம் கொள்முதல் செய்து, அதனை பாட்டிலில் அடைத்து சாராய கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் சாராய பாட்டில் லோடை ஏற்றி, இறக்குவது தொடர்பாக ஆரியப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், பாபு ஆகியோருக்கும் நிர்வாகத்திற்கும் இடையே பிரச்னை இருந்துவந்தது.
இது தொடர்பாக கடந்த 16ம் தேதி சக்திவேல், பாபு, இருவரும் சேர்ந்து, சாராய பாட்டிலை உடைத்து, ஆலை மேலாண் இயக்குநர் சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்தனர்.
இது குறித்து சத்தியமூர்த்தி புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, சக்திவேல், பாபு ஆகியோரை தேடிவருகின்றனர்.

