/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் தொகுதி பயனாளிகளுக்கு போர்வை, காலணி வழங்கல்
/
பாகூர் தொகுதி பயனாளிகளுக்கு போர்வை, காலணி வழங்கல்
ADDED : ஜூன் 01, 2025 04:12 AM

பாகூர்: பாகூர் தொகுதியை சேர்ந்த முதியோர்களுக்கு, இலவச போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி சமூக நலத்துறை மூலம் உதவி தொகை பெறும் முதியோர்களுக்கு இலவசமாக போர்வை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பாகூர் தொகுதியை சேர்ந்த முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி பாகூர் மாரியம்மன் நகர், பழைய காமராஜர் நகர், கிழக்கு வீதி, பாகூர் நகரம், வடக்கு வீதி உள்ளிட்ட 11 அங்கன்வாடி மையங்களில் நடந்தது.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று முதியோர்களுக்கு போர்வை மற்றும் காலணிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.