/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 19, 2025 02:49 AM

புதுச்சேரி : வீராம்பட்டினம், ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழை தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சிவசங்கரன் வழங்கினார்.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதிய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் மாணவர் பதிப்பு பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
வீராம்பட்டினம், ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் நிலை 2 மரி மர்கரீத் வரவேற்றார்.
புதுச்சேரி தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சங்கர் (எ) சிவசங்கரன் தலைமை தாங்கி, தனது சொந்த செலவில், இந்த கல்வியாண்டு முழுதும் மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.