/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கும்பாபிேஷக விழாவில் அன்னதானம் வழங்கல்
/
கும்பாபிேஷக விழாவில் அன்னதானம் வழங்கல்
ADDED : ஜூன் 09, 2025 04:52 AM

புதுச்சேரி : கங்கை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு காங்., மாநில செயலாளர் குமரன் அன்னதானம் வழங்கினார்.
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் வீதி, பாரதி வீதி சந்திப்பில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு காங்., மாநில செயலாளர் முன்னாள் கவுன்சிலர், வக்கீல் குமரன் அன்னதானம் வழங்கினார்.
அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் மாநில செயலாளர் ராஜாராம், காங்., நிர்வாகிகள் மோகனசுந்தரம், தமிழ்ச்செல்வன், சித்தானந்தன், தினகர், குமார், ராஜேஷ், லிங்கப்பன், கந்தன், சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.