/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோயால் பாதித்தவர்களுக்கு சத்துணவு பை வழங்கல்
/
காசநோயால் பாதித்தவர்களுக்கு சத்துணவு பை வழங்கல்
ADDED : ஜூலை 11, 2025 04:05 AM

புதுச்சேரி:காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு பைகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சத்துணவு பைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள், தேசிய சுகாதார இயக்கத்தின் தலைவர் கோவிந்தராஜன், மருத்துவர்கள், மற்றும் சுகாதார மைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் கூறியதாவது;
பாரதப் பிரதமரின் டி.பி. முக்த் பாரத் திட்டம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி மிக சிறப்பாக செயல்பட்டு அதற்கான பாராட்டையும் பெற்றிருக்கிறது. தற்போது காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு பைகள் வழங்கப்படுகிறது.
காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு அந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட வேண்டும் என்பதற்காகவே அரசு இத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை விரைவுபடுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
தொடர்ந்து அங்கு வந்திருந்த நோயாளிகளிடம் கவர்னர் கலந்துரையாடினார். அவர்களின் நோய் தன்மை, சிகிச்சை பெறும் முறை, மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார்.
முதல்வர் அவர் வேலையை பார்க்கின்றார்
புதுச்சேரி மேட்டுப்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் கைலாஷ் நாதனிடம் செய்தியாளர்கள் முதல்வர் சொன்ன கருத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேட்டதற்கு அவர் வேலையை அவர் பார்க்கிறார் என் வேலையை நான் பார்க்கிறேன் என்றார்.