/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
/
புதுச்சேரியில் 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
புதுச்சேரியில் 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
புதுச்சேரியில் 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
ADDED : மார் 04, 2024 06:00 AM

புதுச்சேரி : மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஐந்து வயதிற்குட்பட்ட 81,334 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் புதுச்சேரி மாநிலத்தில் நேற்று நடந்தது.
கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு ஆரம்பப் பள்ளியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் ரங்கசாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அரசு கொறடா ஆறுமுகம்,எம்.எல்.ஏ., ரமேஷ்,சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மருத்துவ கல்லுாரிகள் , ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அவரவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் போலியோ சொட்டு மருந்துபோடும் முகாம் நடந்தது.
பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் சென்று போலியோ சொட்டு மருந்துகளை போட்டனர்.
மேலும் பஸ்டாண்ட், ரயில்வே நிலையம், கடற்கரைச்சாலை, மணக்குள விநாயகர்கோயில், தாவரவியல்பூங்கா, ஊசுட்டேரி மற்றும் சுண்ணாம்பார் படகுக்குழாம், போகோ லேண்ட், போத்திஸ், ப்ரொவிடன்ஸ் மால் ஆகிய இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.
புதுச்சேரி -தமிழ்நாடு எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியகோயில், திருக்கனுர், மற்றும் குருமாம்பேட் ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது.
போலியோ சொட்டு மருந்து முகாமினை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, ராஜிவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கப்பட்டது.
சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறும்போது இந்தாண்டு அதிக இடம்பெயரும் மக்களையும் இனம்கண்டு அவர்களது குழந்தைகளுக்கு முழுமையாக போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வெளியூரிலிருந்து விருந்தினர்களாக வந்திருக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து போடப்பட்டது.
புதுச்சேரி- 63,853 குழந்தைகளும, காரைக்காலில்- 12,257 , மாகி - 1,685 குழந்தைகளும் மற்றும் ஏனாம்-3,539 குழந்தைகளும் மொத்தம் 81,334 குழந்தைகளை கண்டறிந்து சொட்டு மருந்து போட சுகாதார துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.விடுப்பட்ட குழந்தைகளுக்கும் இன்றும் நாளையும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து வீடு வீடாக சென்று வழங்கப்பட உள்ளது என்றார்.

