UPDATED : அக் 06, 2026 11:34 PM
ADDED : அக் 06, 2026 03:54 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நேற்று நடந்த நிலையில், மாவட்டத் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார்.
தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள முக்கிய ஒட்டுச்சாவடிகளுக்கு சென்ற கலெக்டர், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வாக்காளர்கள் சிரமமின்றி காத்திருக்க அமைக்கப்பட்ட நிழற்பந்தல் வசதி, குடிநீர் விநியோகம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
ஒட்டுசாவடி மையங்களில் வாக்காளர்களின் வரிசை மேலாண்மை சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார்.
