/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாவட்ட கலா உத்சவ் போட்டி புதுச்சேரியில் இன்று துவக்கம்
/
மாவட்ட கலா உத்சவ் போட்டி புதுச்சேரியில் இன்று துவக்கம்
மாவட்ட கலா உத்சவ் போட்டி புதுச்சேரியில் இன்று துவக்கம்
மாவட்ட கலா உத்சவ் போட்டி புதுச்சேரியில் இன்று துவக்கம்
ADDED : நவ 05, 2025 07:10 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில அளவிலான மாவட்ட கலா உத்சவ் போட்டி இன்று துவங்குகிறது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை சமக்ர சிக் ஷா திட்ட இயக்குனர் எழில் கல்பனா அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை;
கலா உத்சவ் போட்டிகளில் அரசு, தனியார், அரசு நிதியுதவி பெறும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை சேர்ந்த 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்காலம். வாய்ப்பாட்டு, இசை கருவி மீட்டல், நடனம், தியேட்டர் ஆர்ட்ஸ், பாரம் பரிய கதை சொல்லுதல் ஆகிய பிரிவுகளில் தனி, குழு போட்டிகள் நடத்தப்படும்.
தேசிய வழிகாட்டுதல்கள் இந்த போட்டிகளில் பின்பற்றப்படும். ஒரு மாணவர் ஒரு பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளை நடத்தும் நோடல் அதிகாரியாக ஜவகர் பால்பவன் தலைமை ஆசிரியர் மணிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாவட்ட அளவிலான போட்டிகள் ஜவகர் பால்பவனில் நடக்கும். காரைக்கால், மாகி, ஏனாம் அளவில் போட்டிகள் நடத்தி, தேர்வான மாணவர் விபரங்களை 17ம் தேதிக்குள் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று 5ம் தேதி முதல் துவங்கி, 7ம் தேதி வரை நடக்கிறது.
இன்று (5ம் தேதி) வாய்ப்பாட்டு, இசை; 6ம் தேதி இசை கருவி மீட்டல், நடனம்; 7ம் தேதி தியேட்டர் ஆர்ட்ஸ், பாரம் பரிய கதை சொல்லுதல் பிரிவுகளில் போட்டி நடைபெறும். மாநில அளவிலான போட்டிகள் வரும் 19, 20ம் தேதிகளில் நடத்தப்படும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

