வட்ட அளவிலான விளையாட்டு போட்டி நிறைவு, பரிசளிப்பு விழா
வட்ட அளவிலான விளையாட்டு போட்டி நிறைவு, பரிசளிப்பு விழா
ADDED : மார் 18, 2026 04:54 AM

பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில், வட்ட அளவிலான விளையாட்டு போட்டி நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான வட்ட விளையாட்டு போட்டிகள், சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்து வந்தது. இப்போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவில், பள்ளி தலைமை ஆசிரியரும், மூன்றாம் வட்டத்தின் தலைவருமான பழனிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் ரவிக்குமார், சிவகுமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவில், ஓய்வு பெற்ற உடற் கல்வி விரிவுரையாளர் ஆறுமுகம், டாக்டர் பழனி, மணி மற்றும் பல்வேறு பள்ளிகளை சார்ந்த உடற் கல்வி விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மூன்றாம் வட்ட செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் தணிகைகுமரன் நன்றி கூறினார்.
