ADDED : ஜூன் 25, 2026 03:23 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சித்தர் பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு சங்கம் சார்பில், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிக்கு வீரர்களை தயார் செய்திடும் பொருட்டு, வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில், லாஸ்பேட்டையில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்கிறது.
இப்போட்டியில், புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்களாம்.போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்டோர், 14, 18, 28, 35, 45, 55 வயதிற்கு மேற்பட்டோர் ஆகிய 7 பிரிவுகளில் நடக்கிறது.
