தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெத்தி செமினேர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

பெத்தி செமினேர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

பெத்தி செமினேர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்


UPDATED : நவ 06, 2026 08:08 PM

ADDED : நவ 06, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 08:08 PM ADDED : நவ 06, 2026 08:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெத்தி செமினேர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பசுமை தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது.

பள்ளியின் முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். கவர்னரின் செயலர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பள்ளியின் முதல்வர் பாஸ்கல் ராஜ் பேசுகையில், ‘தீபாவளி என்பது இருளை அகற்றி ஒளியை ஏற்றும் திருநாள் மட்டுமல்லாமல், அறியாமையை அகற்றி அறிவையும், வெறுப்பை அகற்றி அன்பையும் வளர்க்கும் நன்னாள்.

மாணவர்கள் ஒழுக்கம், கல்வி மற்றும் மனிதநேயம் போன்ற நற்பண்புகளை கடைப்பிடித்து, பிறர் வாழ்வில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் விதைக்கும் ஒளி விளக்குகளாகத் திகழ வேண்டும்’ என்றார்.

விழாவில் விளையாட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்து பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us