UPDATED : நவ 07, 2026 12:05 AM
ADDED : நவ 07, 2026 12:02 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் தீபாவளி தொகுப்பு வழங்கும் பணியினை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு சார்பில் சிவப்பு மற்றும் மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி தொகுப்பு வழங்கும் நிகழச்சி திருக்கனுார் ரேஷன் கடையில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு ரூ.700 மதிப்பிலான 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவை, 500 கிராம் மைதா அடங்கிய தீபாவளி தொகுப்பை வழங்கி, துவக்கி வைத்தார்.
இதில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் முத்தழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடந்து, தொகுதி முழுதும் உள்ள ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்கப்பட்டது.
