ADDED : அக் 28, 2024 04:52 AM

புதுச்சேரி, : புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில், பாதுகாப்பான தீபாவளி, மகிழ்ச்சியான தீபாவளி என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது.
வில்லியனுாரில் நடந்த கருத்தரங்கிற்கு, புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். ஆலோசகர்கள் வட்டாட்சியர் ஐயனார், வரலாற்று விரிவுரையாளர் முத்துஅய்யாசாமி முன்னிலை வகித்தனர்.
செயலர் கதிரேசன், துணைச் செயலர்கள் மகேந்திரவேலன், வினோத்குமார் ஆகியோர் நோக்கவுரையாற்றினர்.
சங்கத்தின் பொறுப்பாளர்கள் தனராஜா, விஜயலட்சுமி, சந்திரவதனம், சண்முகம், முனியன் ஆகியோர் 'பாதுகாப்பான தீபாவளி' என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினர்.
பொறுப்பாளர்கள் ரமேஷ், கமலக்கண்ணன், கணபதி, ஜாகிர் உசேன் ஆகியோர் 'மகிழ்ச்சியான தீபாவளி' என்னும் தலைப்பில் கவிதைகள் வழங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

