/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., நிர்வாகிகள் பாக முகவர்கள் கூட்டம்
/
தி.மு.க., நிர்வாகிகள் பாக முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 10, 2024 04:11 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாநில அவைத் தலைவர் எஸ்.பி., சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பெயர் சேர்த்தல், நீக்கல் பணிகளில் தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, வேலவன், தர்மராஜன், கோகுல், ரவீந்திரன், செந்தில்வேலன் உட்பட பலர் பங்கேற்றனர்.