/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து தி.மு.க., அ.தி.மு.க., புறக்கணிப்பு
/
கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து தி.மு.க., அ.தி.மு.க., புறக்கணிப்பு
கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து தி.மு.க., அ.தி.மு.க., புறக்கணிப்பு
கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து தி.மு.க., அ.தி.மு.க., புறக்கணிப்பு
ADDED : ஆக 16, 2025 03:02 AM

புதுச்சேரி: சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தை, தி.மு.க., அ.தி.மு.க., வினர் புறக்கணித்தனர்.
சுதந்திர தினத்தன்று புதுச்சேரி கவர்னர் மாளிகையில் அரசியல் பிரதிநிதிகளுக்கு தேனீர் விருந்து கொடுப்பது வழக்கம். அதன்படி சுதந்திர தினத்தையொட்டி, நேற்று கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடந்தது. விருந்தில், டீ, காபி, லட்டு, சமோசா, தயிர் வடை, குளோப் ஜாம், பஜ்ஜி ஆகிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
விருந்திற்கு வந்த அனைவரையும் கவர்னர் கைலாஷ்நாதன் வரவேற்றார். நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், அரசு கொறாடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், பாஸ்கர், கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், ரிச்சர்ட், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, பா.ஜ., தலைவர் ராமலிங்கம், தலைமை செயலர் சரத்சவுகான், டி.ஜி.பி., ஷாலினிசிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தேனீர் விருந்திற்கு தி.மு.க, கூட்டணில் உள்ள காங்., தலைவர் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.க, பிரதிநிதிகள் யாரும் பங்கேற்றவில்லை. அதே போல, அ.தி.மு.க, பிரதிநிதிகளும் கலந்து கொள்ளாமல் தேனீர் விருந்தை புறக்கணித்தனர்.

