தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க., வேட்பாளர் கோபால் உருளையன்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் கோபால் உருளையன்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

 தி.மு.க., வேட்பாளர் கோபால் உருளையன்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு


ADDED : மார் 29, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 04:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கோபால் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சஞ்சய்காந்தி நகர், குபேர் நகர் பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று காலை உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அம்மன் கோவில் வீதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பகுதி மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, உருளையன்பேட்டை தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வேன் என, வாக்குறுதி அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அவருக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓட்டு சேகரிப்பின்போது, தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் ரவி, ஆளவந்தார், வில்லாலன், சந்திரகலா, சரவணன், கலைவாணி, ராஜி, குமார், ராஜா, சந்துரு, நாகராஜ், கோபு, சேகர், சரவணன், சுந்தர், ராஜேந்திரன், பலராமன், காங்., நிர்வாகிகள் ரகுமான், கோவிந்தாராஜூ, ரமேஷ், சைநாலேபின், அப்துல் ரஷீத், பழனி, ரபிவூக், முருகையன், ஷாபீ, யூசப், இம்ரான், ஆப்தார், அக்ரம், சுஹைப், யாசார், நௌபால், விநாயகம், ராகுல், பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us