தி.மு.க., வேட்பாளரின் மனைவி நேதாஜி நகரில் ஓட்டு சேகரிப்பு
தி.மு.க., வேட்பாளரின் மனைவி நேதாஜி நகரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 06, 2026 09:24 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உப்பளம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அனிபால் கென்னடி மனைவி அனிபால் ஜெசிந்தா நேற்று நேதாஜி நகரில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பின் கடந்த 5 ஆண்டுகளாக உப்பளம் தொகுதியில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவி வருகிறது. மக்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு உள்ளன. அடிப்படை வசதிகள் வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, அமைதியும் ஒற்றுமையும் தொடர வேண்டுமெனில், மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளித்து ஓட்டு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
