தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்ணாடிப்பட்டு தொகுதியில் தி.மு.க., - காங்., உறசல் உச்சக்கட்டம்

 மண்ணாடிப்பட்டு தொகுதியில் தி.மு.க., - காங்., உறசல் உச்சக்கட்டம்

 மண்ணாடிப்பட்டு தொகுதியில் தி.மு.க., - காங்., உறசல் உச்சக்கட்டம்


ADDED : மார் 09, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., காங்., கட்சியில் இணைந்த நிலையில், தி.மு.க., நலத்திட்ட உதவிகளை வழங்க துவங்கியதால் இண்டி கூட்டணியில் உறசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் 2 முறை என்.ஊ்.காங்.,கில் போட்டியிட்ட செல்வம், துணை சபாநாயகராக பதவி வகித்தவர். பின், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் 2021ம் ஆண்டு தேர்தலில் தொகுதி பா.ஜ., விற்கு ஒதுக்கபட்டது. இதனால், 2 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த செல்வத்திற்கு வாய்ப்பு கிடைக்காததால், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்காமல், மவுனமாக இருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற நமச்சிவாயம், பா.ஜ., முக்கிய தலைவராகவும், உள்துறை அமைச்சராக இருந்து வருவதால், இந்த முறையும், தொகுதி தனக்கே தொகுதி ஒதுக்கப்படும் என்பதால், பம்பரமாக சூழன்று அரசு திட்டகளை விரைவாக செய்து வருகிறார்.

இந்நிலையில், வரும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்த செல்வம், அதிரடியாக காங்., கட்சியில் இணைந்தார். இதனால், போன முறை பா.ஜ.,விற்கு எதிராக போட்டியிட்ட தி.மு.க., இந்த முறையும் இண்டி கூட்டணியில் களம் இறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செல்வம் தி.மு.க.,வில் சேராமல், காங்., கட்சியில் சேர்ந்தது தி.மு.க.,வினர் இடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், கடந்த தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தி.மு.க., வேட்பாளர் குமார் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது காங்., - தி.மு.க., கூட்டணிக்கு யார் தலைமை என்ற போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே கடந்த தேர்தலில் தோல்வியடைந்த துணை அமைப்பாளர் குமார், மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேட்டி, சேலையை லிங்காரெட்டிப்பாளையம், விநாயகர் கோவிலில் பூஜை செய்து வழங்கும் பணியினை நேற்று துவங்கினார்.

திடீரென தொகுதியில் தி.மு.க., வேகம் எடுப்பது இண்டி கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தி.மு.க., - காங்., இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us