ADDED : செப் 01, 2025 07:00 AM

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., கிளை ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தொகுதியில் உள்ள 1, 2, 4 ஆகிய கிளைகளுக்கான ஆலோசனை கூட்டம் அண்ணாசாலையில் உள்ள உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சிவா கலந்து கொண்டு தொகுதி மற்றும் தி.மு.க., வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொகுதி செயலாளர் சக்திவேல், தொகுதி செயற்குழு உறுப்பினர் நெல்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஸ்ரீதர், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அர்ஜூன் ரங்கராஜ், அவைத் தலை வர்கள் பேட்ரிக் மோகன், புருஷோத்தமன், அலைக்ஸ், கிளை செயலாளர்கள் கிரி, செந்தில், இருத்தயராஜ், ரவி, ராஜா, கணேஷ் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள், மற்றும் தொகுதி தி.மு.க., பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.