தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க தி.மு.க., வலியுறுத்தல்

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க தி.மு.க., வலியுறுத்தல்

ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்க தி.மு.க., வலியுறுத்தல்


UPDATED : நவ 06, 2026 07:37 PM

ADDED : நவ 06, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:37 PM ADDED : நவ 06, 2026 06:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மீண்டும் ரேஷன் கடை மூலமாக தரமான அரிசி வழங்க வேண்டும் என தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.

தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா அறிக்கை:

புதுச்சேரி அரசு நிலுவையில் இருந்த 6 மாதங்களுக்கான இலவச அரசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசியின் அடிப்படையில் ரூ. 43க்கு ஒரு கிலோ அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. பின், ரேஷன் அரிசியில் ஊழல் நடந்ததால் அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படுகிறது.

தற்போது, வெளிச்சந்தையில் ரூ. 80 முதல் ரூ. 100 வரை ஒரு கிலோ அரிசி விலையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த தவறியதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

அரசு வழங்கும் இந்த மிகக் குறைந்த தொகை பொதுமக்களின் ஒரு வாரக் காலத் தேவைக்கு கூடப் போதுமானதாக இருக்காது. மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கினால் ஆண்டுதோறும் விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப டெண்டர் மாற்றி அமைக்கப்படும்.

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் டெண்டர் விடப்படுவதால் அதை எடுப்பவர்களும் விலைவாசி உயர்வால் எடுத்த டெண்டரை ரத்து செய்து விடுகின்றனர். இதனால், அரிசி காலத்தோடு கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

எனவே, புதுச்சேரி அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையை கைவிட்டு, ரேஷன் கடைகள் மூலமாக தரமான அரசியை வழங்க வேண்டும்.

தேபோல், இந்த ஆண்டுக்கான தீபாவளி தொகுப்பை காலத்தோடு மக்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us