தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திடக்கழிவு மேலாண்மை விதிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு பயிற்சி

திடக்கழிவு மேலாண்மை விதிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு பயிற்சி

திடக்கழிவு மேலாண்மை விதிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு பயிற்சி


UPDATED : நவ 06, 2026 07:37 PM

ADDED : நவ 06, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:37 PM ADDED : நவ 06, 2026 06:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திடக்கழிவு மேலாண்மை விதிகள் கீழ் பெரிய அளவிலான கழிவு உற்பத்தியாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கான இணையதளப் பயிற்சி முகாம் நடந்தது.

புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, புதுச்சேரி தலைமைச் செயலாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

உணவுக் கூடங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அதிக அளவில் திடக்கழிவுகளை உற்பத்தி செய்வதால், இத்தகைய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு நாளைக்கு 100 கிலோவிற்கு மேல் திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அதிக கழிவு உற்பத்தியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிறுவனங்கள் தங்களது கழிவுகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சியிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கழிவுகளின் அளவு மற்றும் மேலாண்மை விவரங்களை கண்காணிக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் புதுச்சேரியில் உருவாகும் திடக்கழிவுகள் குறித்த விவரங்களை தவறாமல் பதிவேற்ற வேண்டும்.

இந்த இணையதளப் பயன்பாடு குறித்த பயிற்சி, மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களைச் சார்ந்த நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.

புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் விஞ்ஞானி செல்வநாயகி, தொழில்நுட்ப அதிகாரி விமல்ராஜ் ஆகியோர் பயிற்சி அளித்ததுடன், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us