/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., பிரட் பாக்கெட் வழங்கல்
/
மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., பிரட் பாக்கெட் வழங்கல்
மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., பிரட் பாக்கெட் வழங்கல்
மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., பிரட் பாக்கெட் வழங்கல்
ADDED : டிச 01, 2025 05:35 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட் பாக்கெட்களை தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் வழங்கினார்.
டிட்வா புயலால் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, மழையால் பாதிக்கப்பட்ட சின்னபொய்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பிரட் பாக்கெட்கள் தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் கோபால் வழங்கினார். தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
இதில், தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் சசிகுமார், துணை செயலாளர் முருகன், மாநில அணிகளின் ரெமி எட்வின், தாமரைக் கண்ணன், அஜிபாஷா, சேட்டு, கிளை செயலாளர்கள் சாலமன், அகிலன், பிரகாஷ், ராஜா, தொகுதி இளைஞரணி விக்கி, ஜெய், மாணவரணி தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் வேலு, கந்தசாமி, கணேசன், சீனு, நெப்போலியன், சதிஷ், ராஜவேல், ராஜா, சைபுதீன், ஸ்டீபன், மதன், மகேஷ், பாரத் ஆகியோர் உடனிருந்தனர்.