/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் சகோதரி வீடு அரசு நுாலகம் அமைக்க ஒப்படைப்பு

ADDED : பிப் 23, 2024 03:35 AM

புதுச்சேரி: தி.மு.க., முன்னாள் எம்.பி., 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சகோதரியின் வீட்டை, அரசு நுாலகம் அமைக்க முதல்வர் ரங்கசாமியிடம் ஒப்படைத்தார்.
புதுச்சேரி தி.மு.க., முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசு. இவரது சகோதரி தில்லி (எ) சரோஜினி. இவர், தனது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர், 2-வது குறுக்குத் தெரு, எண்-6 என்ற முகவரியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார்.
சரோஜினி கடந்த ஜனவரி 14ம் தேதியும், அவரது கணவர் சுப்ரமணி 24ம் தேதியும் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தனர். இதற்கிடையே, சாரதி நகரில் வசித்து வந்த வீட்டை அவர்கள் மறைவிற்கு பிறகு அரசு நுாலகம் அமைக்க வேண்டும் என, 1970ம் ஆண்டு உயில் எழுதி வைத்திருந்தனர்.
அதன்படி, சட்டசபை வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான தனது சகோதரியின் வீட்டை தி.மு.க., முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வீட்டின் பத்திரம் மற்றும் சாவியை ஒப்படைத்தார்.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில் குமார், சம்பத், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளைச் செயலாளர் அகிலன் ஆகியோர் உடனிருந்தனர்.