/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., மருத்துவ அணி பொது மருத்துவ முகாம்
/
தி.மு.க., மருத்துவ அணி பொது மருத்துவ முகாம்
ADDED : மே 03, 2025 05:04 AM

புதுச்சேரி : தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி தி.மு.க., மருத்துவ அணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட கண்ணையா பிரினஸ் வளாகத்தில் நடந்தது.
தி.மு.க., மாநில மருத்துவர் அணி அமைப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் முன்னிலை வகித்தார். தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் தொடர்பான பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
அவைத் தலைவர் சிவக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, நந்தா சரவணன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.