/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : அக் 16, 2024 04:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில தி.மு.க., மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உருளையன்பேட்டை தொகுதி அலுவலகத்தில் நடந்தது.
தொகுதி பொறுப்பாளர் கோபால் தலைமை தாங்கினார்.செயலாளர் சக்திவேல் வரவேற்றார். மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுமதி முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்.
கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் அமுதாகுமார், நர்கீஸ், மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், மகளிர் அணித் தலைவி சந்திரகலா, துணைத் தலைவர் பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்றனர்.