/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் திருத்தப் பணியில் உஷாராக இருக்க வேண்டும் தி.மு.க., அமைப்பாளர் சிவா 'அட்வைஸ்'
/
வாக்காளர் திருத்தப் பணியில் உஷாராக இருக்க வேண்டும் தி.மு.க., அமைப்பாளர் சிவா 'அட்வைஸ்'
வாக்காளர் திருத்தப் பணியில் உஷாராக இருக்க வேண்டும் தி.மு.க., அமைப்பாளர் சிவா 'அட்வைஸ்'
வாக்காளர் திருத்தப் பணியில் உஷாராக இருக்க வேண்டும் தி.மு.க., அமைப்பாளர் சிவா 'அட்வைஸ்'
ADDED : ஆக 14, 2025 11:52 PM

புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் உஷாராக இருக்குமாறு தி.மு.க., பூத் ஏஜெண்டுகளுக்கு அமைப்பாளர் சிவா அறிவுரை வழங்கியுள்ளார்.
தி.மு.க., தொகுதி செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நடந்தது. அவைத் தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், பிரபாகரன், வேலவன், அமுதா, நர்கீஸ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைப்பாளர் சிவா பேசியதாவது:
வீடு தேடி சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியை புதுச்சேரியில் விரைவில் துவங்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
புதுச்சேரியில் இளைஞர்களின் வளர்ச்சியை பறறி கவலைப்படாத அரசு உள்ளது. போலீஸ் துறை முதல்வர், உள்துறை அமைச்சர் என இரு பிரிவாக செயல்படுகிறது. போலீஸ் அதிகாரிகளையே மிரட்டி பணம் பறிக்கும் கொடூரம் அருங்கேறி உள்ளது.
இதையெல்லாம் ஒழிக்க ஒருங்கிணைந்த புதுச்சேரி என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும். அதை நாம் தான் ஒருங்கிணைக்க வேண்டும். தேசிய அளவில் பா.ஜ., வாக்காளர் பட்டியலில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. நமக்கு ஓட்டு போடுபவர்களை நீக்குகின்றனர். நாம் உஷாராக இருக்க வேண்டும். அவர்களின் ஏமாற்று வேலை தி.மு.க.,விடம் பலிக்காது.
வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது பூத் ஏஜெண்டுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்' என்றார்.
தொகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.