/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க.,வினர் முற்றுகை போராட்டம்
/
தி.மு.க.,வினர் முற்றுகை போராட்டம்
ADDED : டிச 09, 2025 05:57 AM

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் சட்டசபை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்திற்கு மாநி ல அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சிவக் குமார், துணை அமைப்பாளர் அனிபால்கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் முன்னிலையில் கட்சியினர் காமராஜர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றனர்.
அவர்களை மிஷன் வீதி சம்பா கோவில் எதிரே போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., சுருதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இதில், முன்னாள்எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலை மைச் செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், லோகையன், ஆறுமுகம், காந்தி, அருட் செல்வி, தொகுதி பொறுப் பாளர்கள் நித்திஷ், பொதுக்குழு உறுப் பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, செல்வ நாதன், பிரபாகரன், சக்திவேல் , தங்கவேலு, வேலவன், செந்தில்வேலன் , தொகுதி செயலாளர்கள் சக்திவேல், சவுரிராஜன், கலைவாணன் கலந்து கொண்டனர்.

