ADDED : டிச 20, 2024 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அம்பேத்கரை அவமதித்தாக கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் கடற்கரை சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி, அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.