/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 25, 2025 06:58 AM

அரியாங்குப்பம்: அடிப்படை வசதிகளை செய்யாத, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை கண்டித்து, தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமல் உள்ளது.
அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட காக்காயந்தோப்பு, பவானி நகர், சுப்புலட்சுமி, சொர்ணா நகர் உள்ளிட்ட இடங்களில், சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், பூஜை போடப்பட்டு பணிகள் துவங்காமல் உள்ளது.
வீராம்பட்டினம் செல்லும் சாலையில், பக்கவாட்டு வாய்க்கால், பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. சாலையில், குப்பைகள் சிதறி கிடக்கிறது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யாத, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, அரியாங்குப்பம் பிரம்பன் சிலை அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் தொகுதி தலைவர் சீத்தாராமன் முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சி தலைவர் சிவா கண்டன உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், வேலன், சிறுபான்மை பிரிவு லியாகத்அலி, சுற்றுச்சூழல் அணி தலைவர் பன்னீர்செல்வம், மீனவர் அணி தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

