/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
ஜிப்மரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 07:17 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜிப்மர் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். அவைத் தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி முன்னிலை வகித்தனர்.
துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லோகைய்யன், ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், பிரபாகரன், செல்வநாதன், தங்கவேலு, சண்முகம், இளம்பரிதி, பழனி, செந்தில்குமார் உட்பட அணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்க படிப்பு, வேலை வாய்ப்பை புறக்கணித்து பிற மாநிலத்தவர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் பயன்கள் தருவதை கண்டித்தும், வேலை வாய்ப்பு வழங்குவதை ஜிப்மர் நிர்வாகமே நடத்த வேண்டும். செவிலியர் மற்றும் குரூப் பி, சி பணியிடங்களில் இந்த மாநிலத்தை சேர்ந்தோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.