/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெள்ளம் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரணம் வழங்கல்
/
வெள்ளம் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரணம் வழங்கல்
வெள்ளம் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரணம் வழங்கல்
வெள்ளம் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 07, 2024 07:28 AM

பாகூர்: இருளஞ்சந்தை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தி.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாகூர் பகுதியில் உள்ள 50 கிராமங்கள் 3 நாட்கள் தண்ணீரில் தத்தளித்தன. வெள்ள நீர் வடிந்த நிலையில், முகாமில் தங்கியிருந்த மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி, சேதமான குடியிருப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க., சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக, இருளஞ்சந்தை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகன், காங்., எம்.பி., வைத்திலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ., க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் மளிகைப் பொருள்களின் தொகுப்பை வழங்கினர்.