/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பேரணி ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பேரணி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பேரணி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., பேரணி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 17, 2024 05:29 AM

புதுச்சேரி : மத்திய அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டது.
தி.மு.க., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
தாவரவியல் பூங்கா முன்பு துவங்கிய பேரணிக்கு எதிர்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கினார். தொ.மு.ச., நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் கூடி, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக பேரணி சென்றனர்.
ஜென்மராகினி ஆலயம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசை கண்டித்து விவசயிகள், தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டத்திற்கு தி.மு.க., அவை தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., விவசாய அணி குலசேகரன், விவசாய தொழிலாளர் அணி முருகன், நெசவாளர் அணி செந்தில்முருகன், அமைப்புசாரா ஓட்டுநர் மதிமாறன் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தொ.மு.ச மாநில தலைவர் அண்ணா அடைக்கலம் வரவேற்றார். மாநில துணை அமைப்பாளர் குமார், தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, சன் குமாரவேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.