sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரியில் 30 தொகுதியிலும் போட்டியிட தி.மு.க.,... தயார்!ஒவ்வொரு தொகுதியிலும் 2 வேட்பாளர் பட்டியல் ரெடி

/

 புதுச்சேரியில் 30 தொகுதியிலும் போட்டியிட தி.மு.க.,... தயார்!ஒவ்வொரு தொகுதியிலும் 2 வேட்பாளர் பட்டியல் ரெடி

 புதுச்சேரியில் 30 தொகுதியிலும் போட்டியிட தி.மு.க.,... தயார்!ஒவ்வொரு தொகுதியிலும் 2 வேட்பாளர் பட்டியல் ரெடி

 புதுச்சேரியில் 30 தொகுதியிலும் போட்டியிட தி.மு.க.,... தயார்!ஒவ்வொரு தொகுதியிலும் 2 வேட்பாளர் பட்டியல் ரெடி

1


ADDED : மார் 04, 2026 04:53 AM

Google News

ADDED : மார் 04, 2026 04:53 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கட்சி தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் போட்டியிடும், வகையில், தொகுதிக்கு இரு வேட்பாளர் பட்டியலுடன் தி.மு.க., தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், இதுவரை நடந்த 15 சட்டசபை பொது தேர்தல்களில் காங்., 7 முறையும், தி.மு.க., 4 முறையும், அ.தி.மு.க., மற்றும் என்.ஆர்.காங்., தலா இரு முறை ஆட்சியை கைப்பற்றியுள்ளன.

மாநிலத்தில் பிரதான கட்சியான காங்., கடந்த 2021 சட்டசபை தேர்தலில், இண்டி கூட்டணி சார்பில் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்., 15 தொகுதிகளிலும், தி.மு.க., 13 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூ., மற்றும் வி.சி.க., தலா ஒரு தொகுதிகளில் போட்டியிட்டன.

உரசல் அதில், கூட்டணிக்கு தலைமை தாங்கிய காங்., 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, பெரும் பின்னடைவை சந்தித்தது. தி.மு.க., 6 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணிக்கு தலைமை தாங்குவதில் இரு கட்சிகளுக்கிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.

அதிரடி கூட்டணி தலைமையை கைப்பற்றிடும் பொருட்டு வரும் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இதற்காகவே கடந்த ஓராண்டாக இரு கட்சிகளும் 'சிட்டிங்'(காங்.,2, தி.மு.க.,6) தொகுதிகளை தவிர்த்த பிற 22 தொகுதிகளிலும் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒருபடி மேலாக தி.மு.க., வரும் தேர்தலில் 30 தொகுதிகளிலும் போட்டியிட அதிரடியாக தயாராகி உள்ளது.

இழுபறி புதுச்சேரி அரசியல், பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தே உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இண்டி கூட்டணியில் தி.மு.க., - காங்., கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளும் முரண்டு பிடித்து வருவதால், இண்டி கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்., ஆர்வம் காரணம், த.வெ.க., தலைவரான நடிகர் விஜய், காங்., கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக, காங்., கட்சியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அக்கட்சியில், தி.மு.க.,வில் தருவதைவிட மூன்று மடங்கு தொகுதிகள் தருவதோடு, ஆட்சியில் பங்கு தருவதாக கூறப்பட்டுள்ளது. அதனால், காங்., கட்சியில் ஒரு தரப்பினர் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எதற்கும் தயார் தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை அறிந்த புதுச்சேரி தி.மு.க., எப்படி இருந்தாலும் வரும் தேர்தலில் 30 தொகுதியிலும் போட்டியிடும் வகையில் தொகுதிக்கு 2 வேட்பாளர்களை தயார் செய்து வைத்துள்ளது. தற்போதைய கூட்டணியை கட்சி தலைமை தொடர்ந்தால், கட்சி தலைமை உத்தரவின்படி காங்., கட்சிக்கு தொகுதிகளை விட்டுக் கொடுப்பது. மாறாக காங்., உடன் கூட்டணி இல்லை எனில், தனது தலைமையில் இந்திய கம்யூ., வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தொகுதிகளை பங்கிட்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.






      Dinamalar
      Follow us