sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 செவிலிய மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா

/

 செவிலிய மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா

 செவிலிய மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா

 செவிலிய மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா


ADDED : மார் 04, 2026 04:52 AM

Google News

ADDED : மார் 04, 2026 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் செவிலியர் கல்லுாரியில், முதலாம் ஆண்டு செவிலிய மாணவர்களுக்கான விளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் (பொ) குமாரி வரவேற்றார். ஜிப்மர் கல்வித் துறைத் தலைவர் விக்ரம் காட்டே தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சண்டிகர் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம், முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் சுக்ஹப்பால் கவுர் சிறப்புரையாற்றினர்.

ஜிப்மர் ஆராய்ச்சி துறைத் தலைவர் காதம்பரி, துணை இயக்குநர் நிர்வாகம் (பொ) பிரேமராஜன் பாராட்டி பேசினார். செவிலியர் கல்லுாரி உதவி பேராசிரியர் வெற்றிச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி பேராசிரியர் லட்சுமி ராமமூர்த்தி விளக்கேற்றும் விழாவின் சிறப்பம்சம் குறித்து பேசினார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் மற்றும் செவிலிய துறைத் அதிகாரிகள் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு தீபம் ஏற்றி வைத்தனர். செவிலியப் பிரிவு பொறுப்பாளர் புஷ்பலதா 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல்' உறுதிமொழியைக் கூற, அதனை தொடர்ந்து வாசித்து செவிலிய மாணவ மாணவியர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர் ஜனார்த்தனன் தொகுப்புரையாற்றினார். உதவி பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us