/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தட்டாஞ்சாவடி தொகுதியை கைப்பற்ற தி.மு.க., 'வியூகம்'
/
தட்டாஞ்சாவடி தொகுதியை கைப்பற்ற தி.மு.க., 'வியூகம்'
தட்டாஞ்சாவடி தொகுதியை கைப்பற்ற தி.மு.க., 'வியூகம்'
தட்டாஞ்சாவடி தொகுதியை கைப்பற்ற தி.மு.க., 'வியூகம்'
ADDED : செப் 28, 2025 08:02 AM
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளராக தி.மு.க.,மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்திஷ் நியமிக்கப்பட்டார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. தொகுதி அவைத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.
தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மதிமாறன், மகளிர் அணி காயத்ரி, ஆஸ்வால்ட் எரிக்வில், தொகுதி நிர்வாகிகள் ஏழுமலை, குடியரசு, வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க., அமைப்பாளர் சிவா கலந்து கொண்டு, வரும் 2026 சட்டசபை தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியை தி.மு.க., மீண்டும் கைப்பற்ற வேண்டும். அதற்காக தி.மு.க., நிர்வாகிகள் ஒருங்கிணைப்பது, இல்லந்தோறும் உறுப்பினர் சேர்ப்பது, தமிழக திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறிப்பாக மகளிர் நலத்திட்டங்கள் மக்களிடத்தில் எடுத்துரைத்து, அத்திட்டங்கள் புதுச்சேரியில் தொடர தி.மு.க.,வுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ளப்படும்' என்றார்.
தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளராக தி.மு.க.,மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்திஷ் நியமிக்கப்பட்டார்.
தட்டாஞ்சாவடி தொகுதி செயல்வீரர்கள் சுகுணா, செல்வம், பிரகாஷ், ஜெப்ரி மார்டீன், ராஜசேகரன், கலியமூர்த்தி, ராஜா, சீனுவாசன், ராஜசேகர், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.