தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் தி.மு.க.,வின்... புது கணக்கு:காங்., கட்சியினர் புலம்பல்

புதுச்சேரியில் தி.மு.க.,வின்... புது கணக்கு:காங்., கட்சியினர் புலம்பல்

புதுச்சேரியில் தி.மு.க.,வின்... புது கணக்கு:காங்., கட்சியினர் புலம்பல்


ADDED : ஜன 28, 2026 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கூட்டணிக்கு பிடி கொடுக்காமல் அடம் பிடித்து வரும் தமிழக காங்., கட்சிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில்,புதுச்சேரியில் 19 தொகுதிகளில் போட்டியிடும் என தி.மு.க.,வின் திடீர் அறிவிப்பு,காங்., கட்சியினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இண்டி கூட்டணியின் பிரதான கட்சியான காங்., கடும் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கும் காங்., கட்சி வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அக்கட்சியில் உள்ள ஒரு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

இதற்கு காரணமாக கூறப்படுவது, அதிக தொகுதிகள் கிடைப்பது, அமைச்சரவையில் பங்கு என பல்வேறு வகையான லாபங்கள் கட்சிக்கு கிடைக்கும். மேலும், குறிப்பிட்ட வயது இளைஞர்களின் ஓட்டுகள் காங்., கட்சிக்கு வரும். அதனால் தமிழகத்தில் இளைஞர்களிடையே கட்சியை கொண்டு செல்ல முடியும். மேலும், வருங்காலத்தில் பிரதான கட்சியாக காங்கிரசை மாற்ற வழி ஏற்படும் எனக்கூறி, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்., தலைவர் ராகுலுக்கு நேரடியாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதனால், தமிழகத்தில் இண்டி கூட்டணியில் தி.மு.க.,வுடன் இதுவரை பேச்சு வார்த்தை துவங்காமல் காங்., தலைமை போக்கு காட்டி வருகிறது. இதனால் எரிச்சல் அடைந்த தி.மு.க., தலைமை காங்கிரஸ் தலைமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதுச்சேரியில் வரும் தேர்தலில் தி.மு.க., சார்பில் 19 தொகுதிகளில் போட்டியிடும். கடந்த தேர்தலில் நின்ற தொகுதிகள் எதுவும் விட்டுத் தரப்படாது என புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் சிவா மூலம் காங்., தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

இதனால் புதுச்சேரியில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியில் ஆட்சி கட்டலில் அமரலாம் என திட்டமிட்டிருந்த காங்., கட்சியினர் கலக்கமடைந்து, தி.மு.க.,வை எப்படி சரிக்கட்டுவது என புலம்பிக் கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us