/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிகள் தி.மு.க., வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள் தி.மு.க., வழங்கல்
ADDED : ஏப் 28, 2025 04:25 AM

புதுச்சேரி: தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் ஏற்பாட்டில், முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 250 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, புதுச்சேரி மாநில தி.மு.க., வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த 250 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தெபெசன்பேட் வீதியில் தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் ஏற்பாட்டில் நடந்த விழாவில், புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா பங்கேற்று, மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாநில அவைத் தலைவர் சிவக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் நித்திஷ் உட்பட பலர் பங்கேற்றனர். தொகுதி செயலாளர் சவுரிராஜன் நன்றி கூறினார்.