ADDED : நவ 29, 2024 04:13 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஜீவானந்தபும் தேசிய ஆவணகாப்பகத்தில் மூன்று நாள் ஆவண பராமரிப்பு குறித்த பயிலரங்கம் நேற்று முன்தினம் துவங்கியது.
பயிலரங்கத்தை, டில்லி ஆவணகப்பகத்தின் துனை இயக்குனர் ஜெனா துவக்கி வைத்தார். பயிலரங்கில், ஆவண அதிகாரிகளின் கடமைகள், பராமரிப்பின் நுணுக்கங்கள், அதன் செயல்முறை குறித்து டில்லி தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் உதயசங்கர், பாலசுப்ரமணியன் பயிற்சி அளிக்கின்றனர்.
புதுச்சேரிஆவணக்காப்பக உதவி இயக்குனர் முருகேசன் கூறுகையில், 'லாஸ்பேட்டையில்தேசிய ஆவணக் காப்பகம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு போபாலில் பிராந்திய அலுவலகமும், ஜெய்பூர், புவனேஸ்வர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஆவண மையங்களும் இயங்கி வருகின்றன.
இங்கு பழமையான பிரஞ்சு ஆவணங்கள், பழைய வரலாற்று ஆவணங்கள், தென் இந்தியாவில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலிருந்து பெறப்படும் ஆவணங்கள், தனியார் ஆவணங்கள் பாதுக்காக்கப்படுகின்றன.
இங்குபிரஞ்சு நிர்வாகத்தின் ஆவணங்கள், 18ம் நுாற்றாண்டு ஆவணங்கள் உள்ளன. திப்புசுல்தான், ஐதர் அலி, டூப்ளே உள்ளிட்ட பிரஞ்சுப் படை அதிகாரிகளின் கடிதப் போக்குவரத்து, ஆங்கிலேயர்களுடன் மோதல் மற்றும் திட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் அடங்கிய ஆவணங்கள் உள்ளன' என்றார்.
இன்று 29ம் தேதி வரை நடக்கும் பயிலரங்கில், நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

