ADDED : செப் 29, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அமெச்சூர் டாட்ஜ் பால் விளையாட்டு சங்கம் சார்பில், 3வது சப் ஜூனியர் தேசிய டாட்ஜ் பால் சாம்பியன்ஷிப் போட்டி உப்பளம் ராஜவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது.
சங்கத் தலைவர் தோம்னிக் முன்னிலை வகித்தார். அரசு கொறடா ஆறுமுகம், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கி, போட்டி யில் கலந்து கொள்ளும் வீரர்களை வாழ்த்தி போட்டி யினை துவக்கி வைத்தனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவு விளையாட உள்ளனர். வெற்றி பெறும் வீரர்கள் இந்திய அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்பர்.