தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்த முதியவரின் கண்கள் தானம்

 இறந்த முதியவரின் கண்கள் தானம்

 இறந்த முதியவரின் கண்கள் தானம்


ADDED : மார் 10, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி திருக்காஞ்சி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 74, இவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது கண்கள் தானம் செய்ய, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளையின் நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை உறவினர்கள் தொடர்பு கொண்டனர்.

அதையடுத்து புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கண் மருத்துவர் முல்லை தலைமையில் செவிலியர்கள் ஈனித்தா, தனலட்சுமி, மலர்விழி விரைந்து வந்து இறந்தவரின் வீட்டிற்கு சென்று கருவிழிகளை சேகரித்து, குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதலுடன் கண்கள் தானமாக பெற்றனர். தொடர்ந்து குடும்பத்தினருக்கு கண் தான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் கூறுகையில், ஆண் பெண் இரு பாலரும் எல்லா வயதினரும் கண் தானம் செய்யலாம், கண் அறுவை சிகிச்சை செய்தவர், சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, புற்றுநோய் வந்து இறந்தவர்களும் கண்தானம் செய்யலாம். இறந்த உடனே கண் இமைகளை மூடி விட வேண்டும், தலையணை வைத்து தலையை சற்று உயர்த்தி படுக்க வைக்க வேண்டும், கண் தானம் செய்வதினால் கண் மருத்துவமனையில் எந்த சலுகையும் எதிர்பார்க்க வேண்டாம்.

கண்தானம் மூலம் பெறப்படும் கண்கள் விற்கப்பட மாட்டாது, ஒருவர் இறந்ததும் கண் வங்கிக்கு அல்லது இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளைக்கு தகவல் தெரிவித்தால் கண் வங்கிக்கு தகவல் கொடுத்து பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இறந்தவரின் வீட்டிற்கு வந்து கருவிழிகளை அகற்றுவார்கள் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us