ADDED : பிப் 26, 2026 05:25 AM

புதுச்சேரி: வில்லியனுார், கிழக்கு சன்னதி வீதியை சேர்ந்த குமாரசாமி மனைவி கஸ்துாரிபாய், 88; வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.
இவரின் கண்களை அவரது மகன்கள் ஜவஹர்லால் நேரு, கோபாலகிருஷ்ணன், மகள்கள் வசந்தகோகிலம் ரவீந்திரன், சுகுணாதேவி பாஸ்கரன், விஜயலட்சுமி கோபிநாத் மற்றும் குடும்பத்தினர் தானம் செய்ய முன்வந்தனர்.
இதுகுறித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை தொடர்பு கொண்டு தெரிவித்த நிலையில், அவர் அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கிக்கு தகவல் கொடுத்தார். டாக்டர் பிரீத்தி, செவிலியர்கள் அபிராமி, வைஷ்ணவி ஆகியோர் கஸ்துாரிபாய் வீட்டிற்கு சென்று அவரது கருவிழிகளை சேகரித்தனர்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி, நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் முன்னிலையில் அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினரிடம் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

