/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அருண்சர்மா தொண்டு நிறுவனம் நன்கொடை வழங்கல்
/
அருண்சர்மா தொண்டு நிறுவனம் நன்கொடை வழங்கல்
ADDED : ஜன 30, 2024 05:51 AM

புதுச்சேரி : உழவர்கரை பொன்னி முத்துாரியம்மன் கோவிலுக்கு அருண்சர்மா தொண்டு நிறுவனம் சார்பில் நன்கொடை வழங்கப்பட்டது.
அருண்சர்மா தொண்டு நிறுவனம், நிறுவனர் ஐஜி வீரராகு உத்தரவின் பேரில், புதுச்சேரி உழவர்கரை தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட முத்துபிள்ளைபாளையம் பொன்னி முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
நிர்வாக இயக்குனரும், சமூக சேவகியுமான பிரபாதேவி வீரராகு முத்து பிள்ளை பாளையம் பொன்னி முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து ஜெயபால் தலைமையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் ஊர் பெரியவர்கள் நாராயணசாமி, ரங்கநாதன் மற்றும் தாமோதரன் ஆகியோர் முன்னிலையில் அருண்சர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர், சமூக சேவகி பிரபாதேவி வீரராகு கோயில் திருப்பணிக்காக ரூ. 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.
தொடர்ந்து கிராமத் தலைவர் நாராயணசாமி அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.