/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நியமன தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்
/
பணி நியமன தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்
ADDED : அக் 12, 2024 05:25 AM
புதுச்சேரி: பணி நியமனம் தொடர்பான தகவல்களை பரப்பும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கியில், தற்போது எந்தவொரு பதவிக்கும் பணி நியமணம் செய்ய ஆட்களை தேர்வு செய்யவில்லை. வங்கியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில், சமூக வளைதளங்களில் மூலம் புதிய ஆட்களை தேர்வு செய்வதாக கூறி சிலர், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் மொபைல் போன் அழைப்பு மற்றும் போலியான இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, பணி நியமனம் தொடர்பாக வரும் தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு, அதியில் கூறப்பட்டுள்ளது.

