/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நர்சிங் நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தெரியாமல் தவிப்பு! காலத்தோடு அறிவிக்க மாணவர்கள் கோரிக்கை
/
நர்சிங் நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தெரியாமல் தவிப்பு! காலத்தோடு அறிவிக்க மாணவர்கள் கோரிக்கை
நர்சிங் நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தெரியாமல் தவிப்பு! காலத்தோடு அறிவிக்க மாணவர்கள் கோரிக்கை
நர்சிங் நுழைவுத் தேர்வு பாடத்திட்டம் தெரியாமல் தவிப்பு! காலத்தோடு அறிவிக்க மாணவர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 27, 2024 04:36 AM

புதுச்சேரி : நர்சிங் நுழைவுத் தேர்விற்கு பாடத்திட்டம் தெரியாமல்மாணவ, மாணவிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மதர் தெரசா சுகாதார நிலையம் மட்டுமின்றி, 9 தனியார் நர்சிங் கல்லுாரி கள் உள்ளன. இவற்றில், 700க்கும் மேற்பட்ட பி.எஸ்.சி., நர்சிங் சீட்டு கள் உள்ளன.
இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மதர்தெரசா கல்லுாரி யில்-80, தனியார் நர்சிங் கல்லுாரியில் 295 என, மொத்தம் 375 நர்சிங் சீட்டுகள், சென்டாக் மூலம் ஆண்டுதோறும் நிரப்பப்பட்டு வருகிறது.
கடந்த கல்வியாண்டு நாடு முழுதும் உள்ள நர்சிங் கல்லுாரிகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த இந்திய நர்சிங் கவுன்சிலிங் உத்தரவிட்டது.
ஆனால், போதிய கால அவகாசம் இல்லாததால் புதுச்சேரிக்கு நர்சிங் நுழைவுத் தேர்வில் இருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டது.
அதையடுத்து புதுச்சேரியில், நர்சிங் நுழைவுத் தேர்வு ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டது.
இந்தாண்டு நர்சிங் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை நுழைவுத் தேர்விற்கான பாடத்திட்டம் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகாததால் மாணவ மாணவிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
கடந்தாண்டு நர்சிங் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டபோது, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அடிப்படையில் நுழைவு தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் நர்சிங் படிப்பிற்கான தகுதி கண்டறிதல் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக் கும். இந்த 5 பாடங்களுக்கும் தலா 20 மதிப்பெண்கள் என, 100 மதிப்பெண்களுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படும்.
இந்த பாடத்திட்டம் முறை இப்போது தொடருமா அல்லது புதிய முறையில் பாடத்திட்டம் வடிவமைத்து நடத்தப்படுமா என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து மாணவர் கள் கூறுகையில், 'இப்போது நர்சிங் நுழைவுத் தேர்விற்கு தயாராகும் வகையில் ஒரு மாதம் காலம் அவகாசம் உள்ளது.
பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டால், அதற்கு ஏற்ப படிக்க ஏதுவாக இருக்கும். ஆனால், வெறும் நர்சிங் நுழைவுத் தேர்வு உண்டு என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது ஏமாற்றத்தை அளிக்கின்றது.
கடைசி நேரத்தில் நர்சிங் பாடத்திட்டம் அறிவித்தால் எங்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. நுழைவு தேர்வுக்கு தயாராக போதிய நேரம் இருக்காது.
குறைந்தபட்சம் கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட பாடத்திட்டம், நுழைவு தேர்வு மதிப்பெண்கள் இந்தாண்டு தொடருமா அல்லது புதிய பாடத்திட்டம் வடிவமைத்து நடத்தப்படுமா என்பதை அறிவிக்க வேண்டும்.
நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நர்சிங் படிப்புகள் உள்ளன. இங்கு சேருவதற்கு தனியாக வேறு நர்சிங் நுழைவு தேர்வு நடத்தப்படுமா அல்லது அரசு நடத்தும் நுழைவு தேர்வினை எழுதினால் மட்டும் போதுமா என்ற குழப்பமும் உள்ளது.
புதுச்சேரியில் அரசு, தனியார், நிகர்நிலை என அனைத்திற்கும் சேர்த்து ஒரே நுழைவு தேர்வு எழுதினால் மாணவர்களுக்கு சிரமம் இருக்காது.
இல்லையெனில் ஒவ்வொரு நுழைவுத் தேர்வினையும் தனித்தனியே மாணவர்கள் எழுத வேண்டி இருக்கும். இது மாணவர்களுக்கு தேவையில்லாத அலைச்சலை ஏற்படுத்தும்.
நர்சிங் நுழைவுத் தேர்விற்கான பாடத்திட்டத்தை காலத்தோடு புதுச்சேரி அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

